கடந்த சில வருடங்களால் குடும்ப நீதி அமைப்பு சீரமைக்கப்பட்ட போதிலும், பலருக்கு இன்னமும் தங்களின் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க இவ்வமைப்பை பயன்படுத்துவது கடினமாக உள்ளது. ஓண்டாரியோ நீதிக் குழு (LCO) மக்கள் தங்கள் குடும்ப பிரச்சினைகளைக் கையாளுவது பற்றி நினைக்கத் தொடங்கும்போது, அமைப்பில் “நுழைவுக் குறிப்புகளை” மேம்படுத்த பரிந்துரைகள் செய்துள்ளது, எங்களது இறுதி அறிக்கையான, விரிவான நுழைவுக் குறிப்புகள் மற்றும் உள்ளடங்கல் ஆகியவை மூலமாக குடும்ப நீதிக்கான அணுகலை அதிகரித்தல்-ஐ எழுதுவதில், LCO ஆனது, அமைப்பை பயன்படுத்தியுள்ள மற்றும் அமைப்பில் வேலை செய்துள்ள நபர்களின் ஆலோசனைகள், எங்கள் திட்ட ஆலோசனைக் குழுவின் பங்களிப்புகள், பல்வேறு ஆலோசனைத் தாள்கள் மற்றும் இடைக்கால அறிக்கை மற்றும் பல நிறுவனங்களின் மற்ற அறிக்கைகள் மற்றும் குடும்ப நீதி அமைப்பை விவாதித்து சீரமைக்க ஆலோசனைகள் வழங்கிய அறிஞர்கள் ஆகியோரின் பின்னூட்டங்கள் போன்ற பலன்களை பெற்றுள்ளது.

நாங்கள் குறிப்பாக அமைப்பில், பின்வரும் ஆலோசனைகளை அடையாளம் கண்டோம்:

 • தவிர்க்க இயலாத எண்ணிக்கையிலான தகவல்கள் மற்றும் அவற்றை புரிந்துகொள்வதில் கடினம்;
 • ஏற்கும்படியான கட்டணத்துடன் கூடிய சட்ட சேவைகளின் பற்றாக்குறை;
 • ஓண்டாரியோவின் பல்வேறு வகையான நபர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை; மற்றும்
 • குடும்ப சட்டப் பிரச்சினைகள் மற்றும் மற்ற குடும்ப பிரச்சினைகளுக்கு இடையேயான தொடர்பு.

சமீபத்திய அமைப்பு மற்றும் எங்கள் முன்மொழிவுகளை தரநிறையாக்கத்திற்கு எதிராக நாங்கள் ஆய்வு செய்தோம் மேலும் செயற்திறன்மிக்க நுழைவுக் குறிப்பு குடும்ப நீதி அமைப்பில் இவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்:

 • தங்களது தினசரி வாழ்க்கையில் மக்களுக்கு கிடைக்கும் அணுகக்கூடிய விவரங்களின் முன்னேற்பாடு;
 • ஆன்லைன் விவரங்களுக்கான ஒரு தனி மையம் இருத்தல்; 
 • இணையத்தை அணுக முடியாத நபர்களுக்கு கிடைக்கும்படியான அச்சிட்ட விவரங்களின் ஏற்பாடு;
 • விவரங்களை அணுகுதல், படித்தல், புரிந்துகொள்ளுதல் அல்லது பயன்படுத்துவதில் கடினம் உள்ளவர்களுக்கான உதவி; 
 • உண்மையாகவே சட்டப் பிரச்சினைகளாக இருக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட, தங்களின் குடும்ப பிரச்சினைகளை கையாள சிறந்த வழியை முடிவு செய்ய நபர்களுக்கான உதவி; 
 • சேவைகளை நகலெடுக்காமல் மற்றும் மக்கள் தங்கள் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லாமல் ஒரு பகுதியிலிருந்து மற்றொன்றிற்கு மிருதுவாக இணைக்கும் அமைப்பை திட்டமிடுதல்; 
 • வெவ்வேறு சமுதாயங்கள் மற்றும் சிறப்பியல்புகளின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுதல்; 
 • நுழைவுக் குறிப்புகளை திட்டமிடுவதில் சமுதாயங்களை பாதிக்காமல் ஆலோசித்தல்; 
 • சேவைகளை தரங்கள் குறையாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்டணத்தில் சேவைகளை ஏற்பாடு செய்தல்; 
 • குடும்ப சட்டப் பிரச்சினைகள் மற்றும் மற்ற தொடர்பான பிரச்சினைகளை ஒரு முழுமையான வழியில் கையாளுதல்; மற்றும் 
 • நீண்ட நாள் நீடித்து நிலைக்கும்படியான ஒரு மாதிரியை உருவாக்குதல்.

கலாச்சார குழுக்கள் அல்லது குடும்ப வன்முறைகளுக்கு உள்ளான பெண்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களுக்கான உதவிகரமான தகவல்கள் பல இருந்தபோதிலும், குடும்ப நீதி அமைப்பு பற்றி மொத்த விவரங்களின் எண்ணிக்கை தவிர்க்க இயலாத வகையிலும், அதிகரிக்கும்படியாகவும், குறிப்பாக ஆன்லைனில் இருக்கிறன. சில விவரங்கள் அச்சிலும், நேரடியாகவும் கிடைக்கின்றன. இணையம் விவரங்களை தேட ஒரு உதவிகரமான இடமாகும், ஆனால் கணிப்பொறிகளை அணுக முடியாத ஆல்லது கணிப்பொறி திறன் பற்றாக்குறையான நபர்கள், தன்னந்தனியான பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது தாய்மொழி ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு அல்லாத நபர்கள் மற்றும் குறைவான கல்வியறிவு அல்லது மொழித்திறனுடைய நபர்கள் ஆகியோருக்கு இது உதவிகரமானதல்ல. அப்படிப்பட்டவர்களுக்கு தொலைபேசி அடிப்படையிலான தகவல் சேவைகள் உள்ளன. ஒரு மைய மன்றம் மூலம் வழங்கப்படும் தகவல்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம் மேலும் குடும்ப நீதி அமைப்பு பற்றிய விவரங்களை புரிந்துகொள்வதில் நேரடியாக உதவியை பெறும் எண்ணத்துடன் இணையத்தில் தகவல்களை அணுகும் நபர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

குடும்ப நீதி தகவல் மையங்கள் (FLICகள்) மற்றும் அவசியமான தகவல் திட்டம் (MIP) ஆகியவை மூலமாக நேரடியாகவும் தகவல்கள் வழங்கப்படும். FLICகள் வழக்கமாக நீதிமன்றங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் மேலும் MIP நீதிமன்ற அமைப்பின் மூலம் வழங்கப்படும். நீதிமன்றத்திற்கு செல்வதை நினைக்கும் முன்னே கூட மக்களுக்கு தகவல்கள் தேவைப்படலாம் மேலும் சிலர் நீதிமன்றங்களில் தகவல்களை அணுக விரும்ப மாட்டார்கள். எனவே நீதிமன்றங்களைத் தவிர மற்ற இடங்களிலும் தகவல்கள் கிடைக்க வேண்டும் எனவும், தகுந்தவாறு பயிற்சிபெற்ற